இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண்ணுக்கு புதருக்குள் நேர்ந்த கொடூரம்... பரபரப்பு சம்பவம்

மறைவான இடத்துக்கு இளம்பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண்ணுக்கு புதருக்குள் நேர்ந்த கொடூரம்... பரபரப்பு சம்பவம்
Published on

பெங்களூரு,

கர்நடக மாநிலம் யாதகிரி அருகே ஒரு கிராமத்தில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்த இளம்பெண், கிராமத்தின் அருகே மறைவான இடத்துக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பசப்பா நிங்கப்பா (வயது 25). ரமேசப்பா (30) ஆகிய 2 பேரும் அங்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இளம்பெண்ணை வாயை பொத்தி புதருக்குள் தூக்கி சென்று மாறி, மாறி கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரி கிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். ஆனாலும் அந்த இளம்பெண், இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி யாதகிரி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை அரசு ஆஸ்பத் திரியில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பசப்பா, ரமேசப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்த னர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com