பீகாரில் சிறுவனுடன் சென்ற தோழியிடம் அத்துமீறிய கும்பல்: 3 பேர் கைது

பீகார் மாநிலத்தில் ஒரு சிறுவன், தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்றபோது, அவர்களை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினர்.
சிறுமியிடம் அத்துமீறிய கும்பல்: 3 பேர் கைது.
Published on

பீகார்,

பீகார் மாநிலத்தில் ஒரு சிறுவனுடன் சாலையில் நடந்த சென்ற தோழியிடம் அத்துமீறிய கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியிடம் அத்துமீறிய கும்பல்

பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், அந்த சிறுவனை தாக்கியதுடன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com