

புதுடெல்லி,
புண்ணிய நதிகளில் ஒன்றான கங்கையில் நீராட ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதை நேரடியாக குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில்,
கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம். அந்த இடங்களில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கங்கை நதி முழுவதும் வீரியம் மிகுந்த பாக்டீரியாக்கள் உள்ளன.
அதனால் கங்கை நதியை குடிக்க, குளிக்க பயன்படுத்த இயலாது. மேற்கு வங்கத்தில் 2 இடங்கள் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் சில இடங்களில் நீரை சுத்தம் செய்துவிட்டு பருகலாம். 86 இடங்களில் வெறும் 18 இடங்களில் மட்டும் குளிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.