இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதருடன் கவுதம் அதானி சந்திப்பு

இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் லிண்டா கேமரூனை கவுதம் அதானி நேரில் சந்தித்தார்.
Image Courtesy : @gautam_adani
Image Courtesy : @gautam_adani
Published on

புதுடெல்லி,

அதானி நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி, டெல்லியில் இன்று இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் லிண்டி கேமரூனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இணைய பாதுகாப்பு மற்றும் அணுசக்தியின் எதிர்கால பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கவுதம் அதானி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவிற்கான இங்கிலாந்து உயர் ஆணையர் லிண்டி கேமரூனை சந்தித்தேன். ஈராக், ஆப்கானிஸ்தான் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அவரது அனுபவம் வியப்பளிக்கிறது.

இந்த சந்திப்பின்போது இணைய பாதுகாப்பு, அணுசக்தியின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்க்ஜள் குறித்து பேசப்பட்டது. இந்தியா-இங்கிலாந்து உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துவதில் அவரது பணி சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com