‘ஜென்சி’ தலைமுறையினர் அறிவில் பின்தங்கி உள்ளனர்: மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்

'ஜென்சி' தலைமுறையினரிடம் தகவல் உள்ளது, ஆனால் அவர்கள் அறிவில் பின் தங்கி உள்ளனர் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
பட்னாவிஸ்
Published on: 

அறிவில் பின்தங்கி உள்ளனர்

நாக்பூரில் நேற்று நடந்த மாநாட்டில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-'ஜென்சி' மற்றும் 'ஜென் ஆல்பா' தலைமுறையினர் தகவல், தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்ட காலத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்களிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன. ஆனால், அந்த தகவல்களின் அடிப்படையிலான அறிவு அவர்களிடம் இல்லை. மாணவர்கள் தங்களின் தகவல்களை அறிவாக மாற்றுவதற்கு ஆசிரியர் கள் உதவ வேண்டும்.

வளர்ந்த நாடுகள் பொதுவாக தங்கள் தாய் மொழியிலேயே கல்வியை வழங்குகின்றன. அதே நேரத்தில் வளரும் நாடுகள் பெரும்பாலும் தங் களை ஆட்சி செய்த முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களின் மொழிகளையே பின்பற்றுகின்றன. இதனால் தான் தேசிய கல்வி கொள்கை தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தைகளுடன் தாய்மொழியில் பேசுவது, அவர்க ளின் மன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்

இன்றைய மாணவர்கள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அனைவ ரும் கூறுகிறார்கள். ஆனால் நாமும் செல்போன்களை அதே அளவு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். எனவே செல்போன்களையும் சமூக ஊடகங்களையும் முழுமையாக நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தொழில்நுட்பத்தை முற்றிலும் நிராகரிப்பதை விட, டிஜிட்டல் தளங்களை பொறுப்பு டன் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com