ஜெர்மனி அதிபர் 2 நாள் பயணமாக இந்தியா வருகை

இந்தியாவுக்கான தனது முதல் பயணத்தின் போது, மெர்ஸ் அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார்.
புதுடெல்லி,
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார். வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பயணம் ஜெர்மனி அதிபர் மெர்சின் முதல் பயணம் என்றும், அவரை 12-ந் தேதி ஆமதாபாத்தில் பிரதமர் மோடி வரவேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






