பயிற்சி படிப்புக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர் - சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த ஜெர்மனி பேராசிரியர்

ஜெர்மனியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் அண்ட்ருட் லாஸ்ட் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
பயிற்சி படிப்புக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர் - சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த ஜெர்மனி பேராசிரியர்
Published on

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் ஹர்ல்ஷ்ருஹி நகரில் ஹர்ல்ஷ்ருஹி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் அண்ட்ருட் லாஸ்ட் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, இந்தியாவை சேர்ந்த மாணவர், பேராசிரியர் அண்ட்ருட் லாஸ்டிடம் பயிற்சி படிப்பில் (இன்டன்ஷிப்) சேர வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக அந்த மாணவர் இமெயில் மூலம் அண்ட்ருட் லாஸ்டிடம் பயிற்சி படிப்பில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மாணவரின் பயிற்சி படிப்புக்கான விண்ணப்பத்தை நிராகரித்த பேராசிரியர் அண்ட்ருட் லாஸ்ட் சர்ச்சைக்குரிய விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய மாணவரின் இமெயிலுக்கு பதில் இமெயில் அனுப்பியுள்ள பேராசிரியர் அண்ட்ருட், நீங்கள் இங்கு வருவதற்காக விமானத்தில் பயணித்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவீர்கள். ஆகையால்தான் நான் உங்களை இங்கு அழைக்கவில்லை. நமது உலகம் மாசுபடுவதை தவிர்க்க நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே பயிற்சி படிப்பில் சேருவது குறித்து யோசனை செய்யுங்கள். இப்படிக்கு அண்ட்ருட் லாஸ்ட்' என தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் பயிற்சி படிப்பு மேற்கொள்ள விரும்பிய மாணவனை கிண்டல் அடிக்கும் வகையில் பதில் உள்ளதாக பேராசிரியர் லாஸ்ட்டினை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com