‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்.
‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:-

மத்திய அரசு ஆணவத்தை விட்டொழித்து, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின்போது, பெட்ரோல், டீசல் மீதான அதிக வரியைக் குறைப்பதன் மூலம் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தலாம் என்று நரேந்திர மோடி கூறியதைத்தான் தற்போது செயல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

உலகளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்துவருகையில் இந்தியாவில் அது அதிகரித்து வருவது அவமானம்.

கடந்த 20 நாட்களில் 14 முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com