கரும்பலகையில் 'வேர்ட்' நடத்திய கானா ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் கம்ப்யூட்டர்களை வழங்கியது

கரும்பலகையில் ‘வேர்ட்’ நடத்திய கானா ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் கம்ப்யூட்டர்களை வழங்கி உதவியது. #GhanaTeacher #NIIT
கரும்பலகையில் 'வேர்ட்' நடத்திய கானா ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் கம்ப்யூட்டர்களை வழங்கியது
Published on

புதுடெல்லி,

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் பள்ளி ஆசிரியர் ரிச்சார்ட் அபியாக் அகோடோ தங்களது பள்ளியில் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காரணத்தால் கரும்பலகையில் மைக்ரோசாஃப்ட் வோர்ட் எப்படி செயல்படுகிறது என்பதை மாணவர்களுக்கு வரைந்து பாடம் நடத்தினார். அவர் பாடம் நடத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உலகம் முழுவதும் செய்தியாகியது. கானாவில் சேக்கிடோமஸ் நகரில் உள்ள பள்ளியில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கம்ப்யூட்டர்கள் இல்லை, இருப்பினும் ஆசிரியர் ரிச்சார்ட் தன்னுடைய மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களை நடத்துவதை தவிர்க்கவில்லை. இதுதொடர்பான வீடியோதான் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக அப்போது ஆசிரியர் ரிச்சார்ட் (ஒவாரா கவாட்வோ பேஸ்புக் பெயர்) பேசுகையில், ''நான் எனது மாணவர்களை நேசிக்கிறேன். அவர்களுக்கு எந்த வகையிலாவது நான் நடந்தும் பாடங்கள் புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இதை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் மற்ற புகைப்படங்களைப் போலதான் பகிர்ந்தேன் ஆனால் இது இந்த அளவு மக்களிடையே ஆதரவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

காவட்டோவின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விரைவில் அவரது பள்ளிக்கு வேண்டிய உபகரணம் செய்து தரப்படும் என்றது.

இப்போது கரும்பலகையில் வேர்ட் நடத்திய கானா ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் கம்ப்யூட்டர்களை வழங்கி உதவியது. இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான என்ஐஐடி கானா, பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்-டாப் வழங்கி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்கள் அடங்கிய புத்தகத்தையும் வழங்கி உள்ளது. இதனை ஆசிரியர் ரிச்சார்ட் தன்னுடைய பேஸ்புக் பகுதியில் வெளியிட்டு உள்ளார். அக்ராவில் உள்ள என்ஐஐடியின் தலைமை மேலாளார் அஷிஷ் குமார் பேசுகையில், இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை நாங்கள் பார்த்தோம். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விவகாரத்தில் ஆசிரியரின் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம்.

ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனமாக நாங்கள் பள்ளிக்கு உதவியை செய்ய முடிவு செய்தோம், என கூறிஉள்ளார். செய்தி தொடர்பான தகவல்களை சேகரித்து, உதவி செய்வது தொடர்பாக உயர்மட்ட அளவில் ஆலோசனையை மேற்கொண்டு என்ஐஐடி உதவிகளை வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com