கேரளாவில் திடீரென உருவான ராட்சத பள்ளம் - மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை

தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் திடீரென ராட்சத பள்ளம் உருவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரளாவில் திடீரென உருவான ராட்சத பள்ளம் - மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் திடீரென ஒரு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. சுமார் 5 மீட்டர் அகலமும், 6 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த பள்ளம் தானாக உருவானதால் அப்பகுதியச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட இந்த பள்ளத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர். எதனால் இத்தகைய பள்ளம் உருவானது என்ற காரணம் தெரியாததால், குழப்பத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com