9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்; அதிர்ச்சி சம்பவம்

சிறுமி பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்; அதிர்ச்சி சம்பவம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சிகந்தரா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமி வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிக்கு கால்நடைக்கு புல் அறுக்க தனியாக சென்றுள்ளார். அப்போது சிறுமியை இடைமறித்த அதே கிராமத்தை சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய 2 சிறுவர்கள் பழங்கள் தருவதாக கூறி சிறுமியை அருகே உள்ள கோதுமை வயல் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வைத்து சிறுமியை 2 சிறுவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, சிறுவர்களிடமிருந்து வீட்டிற்கு தப்பி வந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து தாயாரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com