ஈவ் டீசிங் செய்த வாலிபரை பெரிய கம்பு ஒன்றால் விளாசிய இளம்பெண்; வைரலாகும் வீடியோ

ராஜஸ்தானில் ஈவ் டீசிங் செய்த வாலிபரை தடகள பயிற்சி பெறும் இளம்பெண் கம்பு ஒன்றை கொண்டு அடித்து விளாசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஈவ் டீசிங் செய்த வாலிபரை பெரிய கம்பு ஒன்றால் விளாசிய இளம்பெண்; வைரலாகும் வீடியோ
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் பரத்பூர் நகரில் இளம்பெண் ஒருவர் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டு இருந்துள்ளார். தடகள போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அந்த பகுதியில் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் ஈவ் டீசிங் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் அவரை அந்த இளம்பெண் பொதுமக்கள் முன்னிலையில் பெரிய கம்பு ஒன்றை கொண்டு அடித்து விளாசியுள்ளார். இதுபற்றிய வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

அதில், வாலிபரை நெருங்கிய இளம்பெண், நான் கடும் பயிற்சி மேற்கொள்வதற்காக வந்துள்ளேன். ஆனால் நீ அவதூறு பரப்பி வருகிறாய் என கூறுகிறார்.

அதன்பின் வீடியோ கேமிராவை நோக்கி, இவன் தனது நண்பர்களிடம் புரளி கூறி வருகிறான். இந்த பெண் எனது காதலி என்றும் தினமும் 4 முதல் 5 முறை என்னிடம் பேசுவாள் என்றும் கூறியுள்ளான் என கூறிவிட்டு அவனை பெரிய கம்பு ஒன்றை கொண்டு அடித்து விளாசியுள்ளார்.

இதுபற்றிய எந்த புகாரையும் அந்த இளம்பெண் போலீசில் தெரிவிக்கவில்லை என பரத்பூர் நகர போலீஸ் சூப்பிரெண்டு அனில் டேங்க் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com