

பல்லியா,
உத்தர பிரதேசத்தில் பல்லியா நகரில் ரஸ்டா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வந்த 5ம் வகுப்பு மாணவியை ரஜ்னி உபாத்யாய் என்ற ஆசிரியர் கடந்த 5ந்தேதி அடித்துள்ளார்.
இதில் அந்த மாணவி மயக்கம் அடைந்து உள்ளார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து ஆசிரியர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
சிறுமியின் பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.