பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 சிறுவர்கள் கைது

மது போதையில் 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 சிறுவர்கள் கைது
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 31-ந்தேதி தனது நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.

இந்நிலையில், சிறுமியின் ஆண் நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் அவர்கள் 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி கடந்த 16-ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றபோதுதான் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com