கோழிக்கோட்டில் 7 வயது சிறுமிக்கு ஷிகெல்லா தொற்று

சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.
கோழிக்கோட்டில் 7 வயது சிறுமிக்கு ஷிகெல்லா தொற்று
Published on

கோழிக்கோடு,

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா தொற்று பரவி வருகிறது. கோழிக்கோட்டில் இந்த மாதம் 40-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷிகெல்லா தொற்று பரவி வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கோழிக்கோடு அடுத்த நாதாபுரம் அருகே உள்ள கும்பங்கோடு பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டு உள் ளது. அந்த சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.

மேலும் சிறுமி வசித்த பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும் போது, கிணறுகளில் உள்ள நீரை குளோரினேட் செய்து பயன்படுத்த வேண்டும். அத்துடன் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும் என் றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com