சிறுமி மீண்டும் கர்ப்பம்; மற்றொரு சகோதரியின் போக்சோ வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த இரு சிறுமிகளும், 2 சகோதரிகளின் மகள்கள் என தெரிய வந்துள்ளது.

சிறுமி மீண்டும் கர்ப்பம்; மற்றொரு சகோதரியின் போக்சோ வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்
Published on

ஹப்பள்ளி

கர்நாடகாவில் சிறுமி போக்சோ வழக்கு விசாரணையில் மற்றொரு சிறுமி மீண்டும் கர்ப்பிணியான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் வன்கொடுமை

கர்நாடகாவில் ஹப்பள்ளி-தார்வாத் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஓல்டு ஹப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது. 2025-ம் ஆண்டு 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ரெயில் நிலையம் அருகே ஆளில்லாத பகுதிக்கு அழைத்து சென்ற குற்றவாளி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கர்ப்பிணியான சிறுமிக்கு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை அடையாளம் தெரியாத நபரிடம் சிறுமியின் பெற்றோர் கொடுத்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் கர்ப்பிணி

இந்த சூழலில், கடந்த மே மாதத்தில், அதே குற்றவாளியால் சிறுமி மீண்டும் கர்ப்பிணியாகி உள்ளார். இந்த இரு சம்பவங்களையும் குறித்து அறிந்து அதிர்ச்சியான போலீசார் அது தொடர்பான சூழல்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சிறுமி

இதுபற்றி காவல் ஆணையாளர் என். ஷஷி குமார் கூறும்போது, குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது போக்சோ வழக்காக விசாரிக்கப்படுகிறது. மற்றொரு 14 வயது சிறுமி தொடர்பான போக்சோ வழக்கு விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரு சிறுமிகளும், 2 சகோதரிகளின் மகள்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அனைத்தும் ஒரே குடும்பத்தில் நடந்துள்ளது. சிறுமி இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் என கூறினார்.

இந்த மொத்த சம்பவமும் எப்படி நடந்தது? என்பது பற்றி விசாரித்து வருவதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம் என்றார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com