

சிவமொக்கா: சிறுமி பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் 4 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்த ராகவேந்திரா(வயது 27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை, ராகவேந்திரா பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி, தனது தாயிடம் தெரிவித்துள்ளாள்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பத்ராவதி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராகவேந்திராவை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை சிவமொக்கா கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் இந்த வழக்கை இறுதி விசாரணை நடத்தி நீதிபதி ஜே.எஸ்.மோகன் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்தது நிரூபணமானதால் ராகவேந்திராவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்றும் நீதிபதில் தனது தீர்ப்பில் கூறினார்.