ஒரு நிமிடத்தில் 10 கடின யோகாசனம் செய்து சிறுமி உலக சாதனை

ஒரு நிமிடத்தில் 10 கடின யோகாசனம் செய்து சிறுமி உலக சாதனை படைத்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் 10 கடின யோகாசனம் செய்து சிறுமி உலக சாதனை
Published on

பெங்களூரு,

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலும் யோகா தினத்தையொட்டி பலர் யோகாசனங்களை செய்து அசத்தினர்.

அதன்படி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி பிருத்வி ஒரு நிமிடத்தில் 10 கடினமான யோகாசனங்களை செய்து அசத்தியுள்ளார். உடலை அவர் வளைத்து, நெலித்து செய்யும் யோகாசனங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மேலும் அவர் தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சியில் ஈடுபடுவதாகவும், சுமார் 600 ஆசனங்களை அவர் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அவர் நேற்று ஒரு நிமிடத்தில் 10 கடினமான யோகாசனம் செய்தது உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சிறுமி பிருத்வி ஒரு நிமிடத்தில் 10 யோகாசனங்கள் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com