சாக்லெட் கொடுத்து சிறுவனிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

சாக்லெட் கொடுத்து 3 வயது சிறுவனிடம் மர்மநபர் ஒருவா தங்கச்சங்கிலி பறித்து சென்றுள்ளா.
சாக்லெட் கொடுத்து சிறுவனிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
Published on

குருபரஹள்ளி

பெங்களூரு குருபரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வெளியே சென்றார். அவர்கள் பாகலகுண்டே பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.

அப்போது அவர் தனது மகன் கழுத்தில் தங்கச்சங்கிலியை போட்டு இருந்தார். மறுநாள் காலையில் மகன் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி மாயமானது. இதைக்கண்டு அனில்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து பாகலகுண்டே போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் 3 வயது சிறுவனுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்துவிட்டு ஏமாற்றி தங்கச்சங்கிலியை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து போலீசார் தங்கச்சங்கிலியை மீட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com