‘தட்கல்’ டிக்கெட் கொடுக்க லஞ்சம் வாங்கிய ரெயில்வே ஊழியர் கைது

‘தட்கல்’ டிக்கெட் கொடுக்க லஞ்சம் வாங்கிய ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
‘தட்கல்’ டிக்கெட் கொடுக்க லஞ்சம் வாங்கிய ரெயில்வே ஊழியர் கைது
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள குலப்புரா ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் கணேஷ்லால் ஜெயினிடம் பயணி ஒருவர் 4 தட்கல் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு ரூ.1600-ஐ லஞ்சமாக தந்தால் டிக்கெட் கொடுப்பதாக கணேஷ்லால் ஜெயின் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த பயணி லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கணேஷ்லால் ஜெயின் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com