

புதுடெல்லி,
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை ராம்லல்லா, நிர்மோகி அகாரா, இஸ்லாமிய அமைப்பு ஆகிய மூன்று தரப்பினரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது நிர்மோகி அகாரா தரப்பில் ஆஜரான வக்கீல் சுஷில் குமார் ஜெயின் வாதாடுகையில், சர்ச்சைக்குரிய நிலத்தையும், அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் தங்கள் அமைப்புக்கே வழங்க வேண்டும் என்று கூறினார்.