திருப்பதி கோவிலில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும் - பவன் கல்யாண்

திருப்பதி கோவிலில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிலில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும் - பவன் கல்யாண்
Published on

அமராவதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 8ம் தேதி வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இலவச தரிசன டிக்கெட்டை பெற நேற்றிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுன்ட்டர்களில் திரண்டிருந்தனர்.

அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுன்ட்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைகுண்ட துவார தரிசனம் டேக்கன் விநியேகத்தின் பேது கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்த பைராகிபட்டா என்ற இடத்துக்கு ஆந்திர துணை முதல்-மந்திரி  பவன் கல்யாண் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் கூறுகையில், "சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதன் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கெடுக்கும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகேளாக விடுக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com