மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

மும்பை,

மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தொற்றால் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிதின் கட்காரி, பிரகலாத் சிங் பட்டேல், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் செகாவத், அர்ஜூன் ராம்மேக்வால், ஸ்ரீபாத் நாயக், கைலாஷ் சவுத்திரி ஆகியோர் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டனர். மேலும் ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் மேலும் ஒரு மத்திய மந்திரியான, சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

60 வயதான ராம்தாஸ் அத்வாலேக்கு நீரிழிவு நோய் உள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடங்கிய ஆரம்பகால கட்டத்தில் ராம்தாஸ் அத்வாலே கோ கொரோனா கோ என முழக்கமிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

இதனிடையே நேற்று இந்திய குடியரசுக் கட்சியில் நடிகை பாயல் கோஷ் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com