தரை இறங்குவது கடைசி நேரத்தில் நிறுத்தம்: கோவா விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு

இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவா விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
தரை இறங்குவது கடைசி நேரத்தில் நிறுத்தம்: கோவா விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவா விமான நிலையத்துக்கு இன்று காலையில் ஒரு தனியார் விமானம் வந்தது. அது தரை இறங்க தயாரானபோது, அதன் முன்பக்க தரை இறங்கும் கியர் பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஓடுதள கட்டுப்பாட்டு அதிகாரி ரமேஷ் டிக்கா என்பவர் கவனித்து விட்டார். அவர் உடனே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கிருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஹர்மீத் கவுர், அந்த விமானத்தை தொடர்பு கொண்டு, தரை இறங்குவதை கைவிடுமாறு அறிவுறுத்தினார். அதனால், தனியார் விமானம் தரை இறங்குவதை கைவிட்டது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சற்று நேரம் கழித்து, அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் உதவியுடன் அந்த விமானம் தரை இறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com