

பனாஜி
கணைய சுழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15-ம் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,கணையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளது. அவரது உடல் நலம் நல்ல முன்னேற்ற நிலையில் காணப்படுகிறது. தற்போது அவா பானஜியிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியதாக கோவா சட்டமன்ற துணை பேச்சாளர் மைக்கேல் லோபோ நிருபர்களிடையே கூறியுள்ளார்.
மேலும் லோபோ கூறுகையில், முதல்வர் இன்று சிகிச்சை முடிந்து நல்ல முறையில் கோவா திரும்பியுள்ளார். இது எங்களுக்கு மிகவும் ஒரு நல்ல செய்தி ஆகும். ஆனால் சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் தாக்கலில் முதல்வர் கலந்துரையாடுவாரா? என்பதை தெளிவாக கூற முடியாது. முதல்வர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அதனால் தான் சிகிச்சையிலிருந்து விரைவில் குணப்படுத்தப்பட்டுள்ளார். பட்ஜெட் திட்டத்தை அவர் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணினால், அவரே வந்து செயல்படுத்துவார் எனக் கூறினார்.