கோவாவில் 200 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்தது

கோவாவில் 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
கோவாவில் 200 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்தது
Published on

இந்தியாவின் தற்போதைய கோவா மாநிலம் கடந்த 1961-ம் ஆண்டு இந்திய ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படும் வரை போர்ச்சுக்கீசியர்களால் சுமார் 450 ஆண்டுகள் ஆளப்பட்டது. இதனால் அங்கு போர்ச்சுக்கீசிய காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள் பல உள்ளன. அந்த வகையில் கோவாவின் மார்கோ நகரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான போர்ச்சுக்கீசிய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் அரசு சுகாதார மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கனமழையின் காரணமாக கட்டிடம் இடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com