ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்ற போய்... 5 பேர் பலியான சோகம்

ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து இருந்துள்ளது. அதனை அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்ற போய்... 5 பேர் பலியான சோகம்
Published on

அமராவதி

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம் என நினைத்துள்ளனர். எனினும் சிலர் கரையிலேயே இருந்து கொண்டனர்.

அப்போது, ஆற்றின் ஆழம் தெரியாமல் உள்ளே சென்றுள்ளனர். ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து இருந்துள்ளது. அதனை அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் அபர்ணா என்ற சிறுமி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

அவரை காப்பாற்ற அடுத்தடுத்து 5 பேர் சென்றுள்ளனர். எனினும், அந்த சிறுமி எப்படியோ நீந்தி கரையேறி விட்டார். ஆனால், மற்ற 5 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டனர். கரையில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மந்த்ராலய போலீசாருக்கும் தகவல் சென்றது.

எனினும், இரவு முழுவதும் மீட்பு பணி நடந்தும் அவர்களுடைய உடலை மீட்க முடியவில்லை. தொடர்ந்து இன்று மீட்பு பணி மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com