ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி தங்கம்-பணம் கொள்ளை

ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம்-பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி தங்கம்-பணம் கொள்ளை
Published on

கட்டாக்,

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் உள்ள நாயசரக் என்ற இடத்தில் இந்தியா இன்போலைன் லிமிடெட் என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. பரபரப்பான நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் நேற்று பகலில் ஆயுதம் தாங்கிய கொள்ளை கும்பல் நுழைந்தது.

அங்கு பாதுகாப்பு அறையில் தங்கம் மற்றும் பணம் பாதுகாக்கப்பட்டு வந்தது. கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் பணியாளர்கள் அதிகாரிகளை மிரட்டியதோடு, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை அள்ளிச் சென்றனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com