டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

புதுடெல்லி,

துபாயில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமானத்தில் இருந்து இறங்கிய ஒருவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், அவரிடம் இருந்து 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் விமான இருக்கையின் கீழே அதனை பதுக்கி வைத்து கடத்தி கொண்டு வந்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

அவர் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு சொந்த நாடு திரும்பியுள்ளார். தங்க கட்டிகளை விமானத்திலேயே விட்டு செல்லும்படி தன்னிடம் கூறினர் என அந்த பயணி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com