மங்களூரு விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் தங்கம் சிக்கியது

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் தங்கம் சிக்கியது
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் தங்கம் சிக்கியது
Published on

மங்களூரு:

மங்களூரு பஜ்பே பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த பயணி ஒருவர், தனது உள்ளடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவரிடம் இருந்து ரூ.43.29 லட்சம் மதிப்பிலான 830 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், மங்களூருவில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.5.97 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக உத்தரகன்னடா மாவட்டம் பட்கலை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com