ரெயில் பயணிகளுக்கு நற்செய்தி: பார்சல்களை வீட்டிற்கே வந்து வாங்கும் புதிய சேவை அறிமுகம்!

ரெயில் நிலையங்களுக்கு இடையேயான போக்குவரத்தை ரெயில்வே நிர்வாகம் கவனித்துக் கொள்ளும்.
ரெயில் பயணிகளுக்கு நற்செய்தி: பார்சல்களை வீட்டிற்கே வந்து வாங்கும் புதிய சேவை அறிமுகம்!
ரெயில் சேவை
Published on: 

புது டெல்லி,

இந்திய ரெயில்வே நிர்வாகம், பார்சல்களை வீட்டிற்கே வந்து வாங்கும் புதிய சேவைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ரெயிவே நிர்வாகம்

இந்திய ரெயில்வே தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மற்றும் எளிமையான சேவையை வழங்கும் நோக்கில், 'உச்சியிலிருந்து வீடு வரை' என்ற புதிய கதவுக்கே வந்து பார்சல் சேகரித்து விநியோகிக்கும் (Doorstep Parcel Delivery) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

8 பெருநகரங்களில் முதற்கட்ட சேவை

இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை உட்பட இந்தியாவின் 8 முக்கிய பெருநகரங்களில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்கள் இதில் அடங்கும்.

வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யும் வசதி

பொதுமக்கள் இனி பார்சல்களை அனுப்ப ரெயில் நிலையங்களுக்கு அலைந்து திரியத் தேவையில்லை. இதற்கென உருவாக்கப்படும் பிரத்யேகச் செயலி அல்லது இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே எளிதாக முன்பதிவு செய்யலாம். ரெயிலின் புறப்பாட்டுக்கு 15 நாட்களுக்கு முன்பிலிருந்து, 1 நாள் முன்பு வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

கூட்டணி நிறுவனங்கள் மூலம் விநியோகம்

ரெயில் நிலையங்களுக்கு இடையேயான போக்குவரத்தை ரெயில்வே நிர்வாகம் கவனித்துக் கொள்ளும். அதே நேரத்தில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே வந்து பார்சல்களைச் சேகரிப்பது மற்றும் உரியவர்களின் வீடுகளிலேயே கொண்டு போய் சேர்க்கும் இறுதிப் பணிகளை ரெயில்வேயுடன் இணைந்த தளவாடக் கூட்டாளிகள் கவனித்துக் கொள்வார்கள்.

பாதுகாப்பான லைவ் டிராக்கிங் - ஓடிபி முறை

முன்பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பார்சலுக்கும் 10 இலக்க பிஆர்ஆர் எண் வழங்கப்படும். இதன் மூலம் பார்சல் எங்கு உள்ளது என்பதைத் தங்களின் மொபைல் வழியாகவே 'லைவ் டிராக்கிங்' முறையில் துல்லியமாக கண்காணிக்கலாம். மேலும், பார்சல்கள் பாதுகாப்பாகச் சென்றடைவதை உறுதி செய்ய டெலிவரியின் போது ஓடிபி சரிபார்ப்பு முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

இதற்கான செயலி மற்றும் தொழில்நுட்பப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், மிக விரைவில் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் வணிகர்கள், சிறு நிறுவனங்கள் மற்றும் சாமானிய மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X