மதுராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து:, டெல்லி-ஆக்ரா ரயில் போக்குவரத்து பாதிப்பு

மதுராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் டெல்லி -ஆக்ரா இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து:, டெல்லி-ஆக்ரா ரயில் போக்குவரத்து பாதிப்பு
Published on

மதுரா,

உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா அருகே உள்ள ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. இந்த விபத்தில் எந்த உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால், டெல்லி- ஆக்ரா இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாகியுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ரயில் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 2 வாரங்களுக்கு முன்பு மதுரா அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. செப்டம்பர் துவக்கத்தில் சரக்கு ரயிலின் 16 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com