'இனிதே ஆரம்பித்த 2023' - கூகுளின் சிறப்பு டூடுல் வெளியீடு...!

2023-ஐ வரவேற்கும் விதமாக கூகுளின் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
'இனிதே ஆரம்பித்த 2023' - கூகுளின் சிறப்பு டூடுல் வெளியீடு...!
Published on

புதுடெல்லி,

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலித்து வருகிறது. தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.

கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இத்தகைய கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில், 2023 ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதாமக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com