துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை எதிர்க்கட்சிகள் நிறுத்துகிறது

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தியின் பேரனை எதிர்க்கட்சிகள் நிறுத்துக்கிறது என தகவல்கள் தெரிவித்து உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை எதிர்க்கட்சிகள் நிறுத்துகிறது
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகிறார்கள். ஜனாதிபதி தேர்தல் முடிந்து பிறகு துணை ஜனாதிபதி தேர்தலும் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி பதவியைப் போல் துணை ஜனாதிபதியின் பதவி காலமும் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதி டெல்லி மேல்சபையின் தலைவராகவும் இருப்பார்.தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்டு மாதம் 10ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. ஜனாதிபதி தேர்தலை போல் துணை ஜனாதிபதி தேர்தலிலும், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்து உள்ளன.

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே துணை ஜனாதிபதி வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் களமிறக்கலாம் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கோபால கிருஷ்ண காந்தி ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர். மேற்கு வங்க கவர்னராகவும் பதவி வகித்தவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com