உன்சூர் அருகே அரசு பஸ்-கார் மோதல்; தம்பதி சாவு

உன்சூர் அருகே அரசு பஸ்-கார் மோதியதில் தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
உன்சூர் அருகே அரசு பஸ்-கார் மோதல்; தம்பதி சாவு
Published on

மைசூரு-

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா இரிகெரே கிராமத்தை சேர்ந்தவர் பெல்லியப்பா (வயது 66). இவரது மனைவி வீணா (50). பெல்லியப்பா ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் ஆவார். இந்த நிலையில் மைசூருவுக்கு விமானத்தில் வந்த அவரது மகளை அழைத்து வருவதற்காக பெல்லியப்பாவும், வீணாவும் காரில் சென்றனர்.

அப்போது அவர்கள் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே அருகே ரங்கனகொப்பலு பகுதியில் சென்றபோது, காரும், எதிரே வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், பெல்லியப்பாவும், வீணாவும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிளிகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com