பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தற்சார்புடைய சரக்கு போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதி! மந்திரி ராஜ்நாத் சிங்

இந்திய ராணுவ சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார்.
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தற்சார்புடைய சரக்கு போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதி! மந்திரி ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி,

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற முதலாவது இந்திய ராணுவ சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார்.

அவர் கூறுகையில், எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லவும் வலுவான, பாதுகாப்புடன் விரைவான தற்சார்புடன் கூடிய சரக்கு போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா இன்று 5-வது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இது விரைவாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் போர் களத்திலோ அல்லது பொதுமக்களிடையிலோ சரக்கு போக்குவரத்தின் அம்சம் அதிகரிக்கப் போகிறது.

இச்சூழ்நிலையில், 21-ம் நூற்றாண்டின் தேவையின் அடிப்படையில் சரக்கு போக்குவரத்து முறையை மறு சீரமைப்பது அவசியம். இந்நோக்கங்களை அடைய தற்சார்பு சரக்கு போக்குவரத்து முறை தேவை என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com