கேரளாவில் சிறைகளின் சுற்றுச் சுவர்களில் மின்சார வேலிகளை பொருத்த அரசு முடிவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகன் என்பவர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடினார்
கேரளாவில் சிறைகளின் சுற்றுச் சுவர்களில் மின்சார வேலிகளை பொருத்த அரசு முடிவு
Published on

கேரளாவில் உள்ள சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறை சுற்றுச்சுவர்களில் மின்கம்பி வேலி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.4.9 கோடியை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. தவனூர் மத்திய சிறை, மனந்தவாடி மாவட்ட சிறைச்சாலை, கொல்லம் மாவட்ட சிறை, கண்ணூர் மாவட்ட சிறை உள்ளிட்ட சிறைச்சாலைகளிலும் மின்வேலிகள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகன் என்பவர் வய்யூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து தென்காசி போலீசார் அவரை கைது செய்தனர்.அதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதமும் கோவிந்தசாமி என்ற கைதி கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடினார். அடுத்தடுத்து கைதிகள் சிறையில் இருந்து தப்பிய நிலையில், சிறை பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com