புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை


புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை
x

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்,

புதுவையில் ஆயுத பூஜையையொட்டி கடந்த 1-ந் தேதியும், காந்தி ஜெயந்தியையொட்டி நேற்றும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறையாகும். இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் பணி நாளாக இருந்தது.

இதைத்தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் (தொழில்முறை கல்லூரிகள் உள்பட) அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் ஹிரன் பிறப்பித்துள்ளார். இதன்மூலம் மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

1 More update

Next Story