மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் உயிரிழப்பு

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பண்டாரா,

மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்பொழுது, அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு உள்ளோம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com