பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயார்- மந்திரி ஆர்.அசோக் பேட்டி

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயார் என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயார்- மந்திரி ஆர்.அசோக் பேட்டி
Published on

பெங்களூரு: வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-பெங்களூரு மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு குறித்த விஷயங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மாநகராட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்கிறோம். தேர்தலை நடத்த தேவையான பணிகளை மேற்கொள்வோம். மாநகராட்சி உள்பட எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாங்கள் அஞ்ச மாட்டோம்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com