எஸ்.வி.சேகர் மேல்முறையீடு குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


எஸ்.வி.சேகர் மேல்முறையீடு குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

ஒரு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும் எஸ்.வி.சேகர் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

புதுடெல்லி,

நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு; அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

கீழ்கோர்ட்டு உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், ஒரு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும் எஸ்.வி.சேகர் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது எஸ்.வி.சேகர் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் சிறையில் சரணடைய அவருக்கு அளிக்கப்பட்ட விலக்கை ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி வரை நீட்டித்தனர்.

1 More update

Next Story