இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

இந்திய விமானப்படைக்கு புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நியமனம் செய்யப்பட உள்ளார்.
இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படையின் தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா செயல்பட்டு வருகிறார். இவரின் பதவி காலம் இம்மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஆர்.கே.எஸ். பதாரியாவின் பதவிகாலம் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய விமானப்படையின் புதிய தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விவேக் ராம் சவுதாரி இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட உள்ளார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானப்படையின் துணை தளபதியாக செயல்பட்டு வரும் விவேக் ராம் சவுதாரி விமானப்படையின் தளபதியாக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com