

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனககிரி தாலுகா கண்ணேமாரடு கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகி றார். இதற்கிடையே பசவராஜ் வேலை கிடைப்பதற்கு முன்பே தனது அத்தை மகளான பி.எஸ்சி படித்துள்ள இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் அடிக்கடி சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது திருமண ஆசைக்காட்டி பசவராஜ், அத்தை மகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த காதலை அறிந்த இருவரின் பெற்றோரும் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பசவராஜ், அத்தை மகளுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதை அறிந்த அத்தை மகள் உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு ஆசிரியர் வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்வோம் என கூறி வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பசவராஜுக்கு ஆசிரியர் பணியும் கிடைத்தது. அதன்பிறகும் அவர் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் பசவராஜ், தான் காதலித்து உல்லாசம் அனுபவித்த அத்தை மகளை திருமணம் செய்யாமல் வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுடனேயே பசவராஜ் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுபற்றி பசவராஜின் அத்தை மகளுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் பற்றி கனககிரி போலீசில் பசவராஜ் மீது பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகாரில், தன்னை காதலித்து திருமண ஆசைகாட்டி உல்லாசம் அனுபவித்துவிட்டு பசவராஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே அவர் மீது நடவ டிக்கை எடுக்கும்படியும் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார், ஆசிரியரான பசவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.