

புதுடெல்லி,
வருமான வரியை தாக்கல் செய்தவற்கான இணைய தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், இன்போசிஸின் தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "தொடங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் புதிய இணைய தளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் தீர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சரிடம் விளக்கமளிக்க இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட் 21ஆம் தேதி, இணையதளம் இயங்கவில்லை" என பதிவிடப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்காக புதிய இணையதள பக்கம் கடந்த ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வந்தது.