பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. #CashCrunch #CashlessATMs #RBI
பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு
Published on

புதுடெல்லி,

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, டெல்லி உள்படப் பல மாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத விவகாரத்தில் மத்திய அரசு விமர்சனத்தை எழுந்து உள்ளது. ஏடிஎம்களில் பணம் இல்லாமல் சென்றது தொடர்பாக நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும், தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.

இந்நிலையில் இனிவரும் நாட்களில் ரூ. 500 நோட்டு, ஒரு நாளைக்கு 5 மடங்காக, ரூ.2500 கோடிக்கு அச்சிடப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ் சி கார்க் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 500 ரூபாய் நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை 70,000-75,000 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com