விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப முயற்சி செய்வதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் 7 ஆண்டுகள், தவறுகளின் நீண்ட சங்கிலியாக இருக்கிறது. இதை சிலர் ஒப்புக்கொண்டார்கள், சிலர் உணர்ந்தார்கள், சிலர் உணரவில்லை. மோடியின் இந்த தொடர் தவறுகளுக்கு நாடு ஏன் விலை கொடுக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.

நான்கு தக்காளி அல்லது வெங்காயத்துக்கு மேல் வைக்கக்கூடாது என்று சமையலறையில் 144 தடை உத்தரவு உள்ளது போல் தெரிகிறது எனக்கூறிய அவர், இந்தப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு தொடர்ந்து முயற்சிப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். தங்கள் தோல்விகளை மறைக்க சாதி மற்றும் மத பிரச்சினைகளை உருவாக்கி நாட்டின் கூட்டு கவனத்தை இந்த அரசு அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com