

அமிர்தசரஸ்,
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பணியை துவங்கி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என கூறி உள்ளார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல் மந்திரிமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.