வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா

வக்பு வாரியங்களை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் அதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொள்கிறோம் என்று ஜேபி நட்டா கூறியுள்ளார்.
வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா
Published on

புதுடெல்லி,

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று மத்திய மந்திரியும் பாஜக தலைவருமான ஜேபி நட்டா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

துருக்கி மற்றும் பல முஸ்லிம் நாடுகளில் உள்ள வக்பு சொத்துகளை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இங்கு வக்பு சொத்துகளை யா கையாளுகிறாகள் என்பதை மட்டுமே அரசு கேட்கிறது. அதனை நிவகிப்பவாகள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்கிறது.

வக்பு வாரியங்களை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் அதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொள்கிறோம்.வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. வக்பு சொத்துகளும் நிதியும் முஸ்லிம்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வக்பு வாரியம் செயல்படுவது உறுதி செய்யப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com