

புதுச்சேரி,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரியில் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது.
அரசு ஊழியர்கள், கெளரவ அட்டைதாரர்கள் அல்லாத அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.500 தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்கு புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.