அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் படுகாயம்

பண்ட்வால் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் படுகாயம்
Published on

 மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கூவேத்திலா பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் கவுடா (வயது 28). இவர் தனது நண்பான் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தார்.

அப்போது கூவேத்திலா சாலையில் உள்ள திருப்பத்தில் சென்றபோது எதிர்திசையில் பி.சி.ரோட்டில் இருந்து புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரென ஜெகதீசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகதீஷ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார்.

இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com